விவசாய அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
நெற்பயிர்ச் செய்கைக்காக வழங்கப்படும் சேதன பசளை மற்றும் சேதன பசளை மானியம் விவசாயிகளுக்கு அவசியமற்றது எனில் அவை தேயிலை மற்றும் மரக்கறி செய்கைகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள விவசாய சங்கங்களுடன் அண்மையில் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சேதன பசளை தொடர்பில் நெல் விவசாயிகளின் அணுகுமுறை நம்பிக்கைக்கு உரியதாக இல்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் உரங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலைகளும் அதற்கு காரணமாக காணப்பட்டது.
இதன்படி, இந்த வருடம் சேதன பசளை மற்றும் சேதன பசளை மானியத்தை நெல் விவசாயிகள் மறுத்தால், பெரும்போகத்தில் அவற்றை தேயிலை மற்றும் மரக்கறி செய்கைகளுக்கு வழங்குமாறு விவசாய அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சாமி சிலையின் கையில் ரத்தத்துடன் கிடந்த மனிதத் தலை ; பிறந்த நாளன்று நடத்தப்பட்ட கொடூரத்தின் பின்னணி வௌியானது
தமிழர் பகுதியொன்றில் சிறுமிக்கு பல தடவைகள் நடத்தப்பட்ட கொடூரம் ; துயரை ஏற்படுத்தும் குடும்பப் பின்னணி