பெருந்தோட்ட பாடசாலைகள் குறித்து வெளியான முக்கிய தகவல் ; பிரதமர் வழங்கிய உறுதி
பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான காணி உறுதிப் பத்திரம் விரைவில் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வாக்குறுதி அளித்ததாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
மலையகப் பாடசாலைகளின் காணி உரிமம் மற்றும் கல்வி அபிவிருத்தி குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (19) நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

காணி உறுதி
பெருந்தோட்டப் பாடசாலை ஒவ்வொன்றுக்கும் தலா இரண்டு ஏக்கர் காணி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதாக பிரதமர் உறுதியளித்தார்.

குறித்த கலந்துரையாடலில் மலையகத்திலுள்ள 864 பாடசாலைகளின் தற்போதைய நிலை குறித்த விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்தார்.
ஒரே வீட்டில் 6 ஆண்டுகளாக குடித்தனம் ; இறுதியில் திருநங்கைக்கு காதலன் நடத்திய பயங்கரம், வெளியான பகீர் பின்னணி
பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களை மேம்படுத்தல் மற்றும் விளையாட்டுத் துறையை விருத்தி செய்தல் குறித்தும் ஆராயப்பட்டது.
பெருந்தோட்டப் பாடசாலைகள் அதிகமுள்ள பிரதேசங்களில் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் விசேட தமிழ் பிரிவு ஒன்றினை உருவாக்குவது குறித்தும் சுமுகமான தீர்மானம் எட்டப்பட்டது.