இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் 6 அவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இஸ்ரேலில் காணாமல் போன இரண்டு பேரைத் தவிர வேறு எந்த இலங்கையருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்ட சம்பவம் இதுவரை பதிவாகவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் (13-10-2023) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா இந்த தகவலை தெரிவித்துள்ளது.
குறித்த போரில் பாதிக்கப்படும் இலங்கையர்களுக்கு உதவிகளை உடனடியாக வழங்கத் தேவையான நிதியை வழங்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டதாக காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
மேலும், நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்காக வணிக விமான சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்