இலங்கை ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!
நாட்டிலுள்ள பிரதான ரயில் மார்க்கத்தில் இரண்டு ரயில்கள் தவிர்ந்த ஏனைய சகல புகையிரதங்களும் சேவையில் ஈடுபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரவு நேர அஞ்சல் ரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட சகல தரப்பினரும் தற்போது சேவைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இன்றையதினம் (14-09-2023) காலை முதல் ரயில்கள் சேவைகள் தாமதமடைந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவி உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில் இயந்திர சாரதிகள் கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில் நேற்று அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.