பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
செப்டம்பர் 24 அன்று முதல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின், ஐஸ், கொக்கேய்ன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பான தகவல்களை, சம்பந்தப்பட்ட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் (SDIG) கைபேசி இலக்கத்திற்கு நேரடியாக அழைத்து பொதுமக்கள் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அவ்வாறு வழங்கப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் நிலையில், தேவையான சோதனைகள், நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.
மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களின் பெயர்கள் மற்றும் கைபேசி இலக்கங்கள் பின்வருமாறு: