பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி திருத்தம்!
பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை திருத்துவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, நேற்று(01) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான 30 ரூபா விசேட வர்த்தக வரியை 10 ரூபாவாக குறைப்பதற்கும், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான 60 ரூபா விசேட வர்த்தக வரியை தொடர்ந்தும் பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், வானிலை மற்றும் பண்டிகை காலத்தை அடிப்படையாக கொண்டு தொடர்ந்து இதன் விலை அதிகரிப்பதை தடுக்கும் வகையில் இந்த புதிய வரி திருத்தம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.