IMF சமநிலையான அணுகுமுறையைக் கையாள வேண்டும் ; ஜனாதிபதி அனுர வலியுறுத்தல்
இலங்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் சமநிலையான அணுகுமுறையை கையாள வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் சிரேஷ்ட பிரதானி பீட்டர் ப்ரூவர் தலைமையிலான பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது ஜனாதிபதி இந்த வலியுறுத்தலை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடினமான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்த மக்களைக் கருத்திற்கொண்டு சம நிலையான அணுகுமுறை பேணப்பட வேண்டும்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்ட வெற்றியானது, மக்கள் மத்தியில் ஆட்சியின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதில் தங்கியுள்ளது எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.