இலங்கை குறித்து மகிழ்ச்சி தகவலை வௌியிட்ட IMF
இலங்கை மக்கள் எதிர்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறாத சூழல் உருவாகும் எனவும்,இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழு பிரதானி கலாநிதி பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன் வசதியின் மதிப்பாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு பிரதானி இன்று (04) இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத்தில் இலங்கை மக்கள் நாட்டை விட்டு வெளியேறாத சூழல் உருவாகுவதுடன் கடந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் இலங்கையை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்ப கூடிய வாய்ப்பு ஏற்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.