02 வயது குழந்தைக்கு எமனான தாயுடன் தகாத உறவிலிருந்த நபர் ; அழுததற்காக நடத்தப்பட்ட கொடூரம்
கம்பஹா தொல்கொட பகுதியில் இரண்டு வயது ஆண் குழந்தையை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் தாயுடன் தவறான உறவிலிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகஹாவத்த பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலை தொடர்பாக 49 வயது நபரே சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரேதப் பரிசோதனை
சம்பவம் தொடர்பில் தெரியவருதாவது, கைது செய்யப்பட்ட நபருக்கும் குழந்தையின் தாய்க்கும் தவறான உறவு இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் போது, குழந்தையின் தாய் முகம் கழுவுவதற்காக வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள கிணற்றுக்குச் சென்றிருந்தபோது, குழந்தையின் அழுகையைத் தாங்க முடியாமல் குறித்த சந்தேக நபர் குழந்தையை அடித்ததாகவும், அதனால் குழந்தை சுயநினைவை இழந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
முகம் கழுவிவிட்டுத் தாய் வீடு திரும்பியபோது குழந்தை சுயநினைவை இழந்து கீழே விழுந்து கிடந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்ததுடன் இதுகுறித்து மீகஹாவத்தை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்காக சடலத்தை ராகம பொது மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணைகளை மீகஹாவத்த பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.