வட்டிக்கு விட்ட இடத்தில் மலர்ந்த தகாத உறவு ; காதல் கணவருக்கு மனைவி செய்த கதிகலங்க வைக்கும் சம்பவம் ; நீதிமன்றின் பரபரப்பு தீர்ப்பு
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த விவகாரத்தில் மனைவி -கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார் சாரதி ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆயுள் தண்டனை
இந்த தம்பதிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மனைவி, ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். பின்னர் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
கணவர் சென்னையில் கார் டிரைவராக வேலை செய்து வருவதால் இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இருவரும் அழைத்து தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர்கள் தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.
இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், விதித்திக்கப்பட்டது.