இறந்துவிட்டதாக சவப்பெட்டியில் வைக்கப்பட்ட மூதாட்டி; மீண்டும் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி
சீனாவில் (China) இறந்துவிட்டதாக கருதி, சவப்பெட்டியில் வைக்கப்பட்ட மூதாட்டி, மறுநாள் உயிர் பிழைத்து கண் விழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
வட சீனாவின் ஹெபெய் மாகாணம், சாங்ஜோவ் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக மூளைத் தமனி ரத்த உறைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இரண்டு நாட்களில் உயிரிழந்த மூதாட்டி
அதுமட்டுமன்றி, அவருக்கு புற்றுநோய் பாதிப்பும் மிக தீவிரமாக இருந்துள்ளது. இதன் காரணமாக, இனியும் அவருக்கு சிகிச்சை பலன் அளிக்காது என கூறி, மருத்துவர்கள் மூதாட்டியை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மூதாட்டி, மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் செப்டம்பர் 08, 2026 அன்று அவரது உடலில் எந்தவித அசைவுகளும் இல்லாமல் இருந்துள்ளது.
இதன் காரணமாக, மூதாட்டி உயிரிழந்துவிட்டார் என அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், இறுதி சடங்குகளுக்கு ஏற்பாடு செய்த அவர்கள், குளிரூட்டும் பெட்டிடை வரவழைத்து அதில் மூதாட்டியின் உடலை வைத்துள்ளனர்.
மூதாட்டியின் உடல் குளிரூட்டும் பெட்டியில் வைக்கப்பட்ட நிலையில், அவரது மருமகளுக்கு ஏதோ முனகல் சத்தம் கேட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர்கள் குளிரூட்டும் பெட்டியை திறந்து பார்த்தபோது மூதாட்டி, உயிருடன் இருப்பதை கண்டு அவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், மூதாட்டி உயிருடன் இருப்பதை உணர்ந்த உறவினர்கள், இறுதி சடங்குகளை ரத்து செய்து , மூதாட்டி மீண்டும் வீட்டில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளார்.
எனினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் அதாவது செப்டம்பர் 11, 2026 அன்று அவர் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் செப்டம்பர் 13, 2026 அன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.