மசாஜ் நிலையத்தில் தகாத தொழில் ; கொத்தோடு சிக்கிய கூட்டம்!
கிரிபத்கொடையில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளை முற்றுகையிட்ட கிருபத்கொடை பொலிஸார், 10 பெண்கள், 5 ஆண்கள் மற்றும் இரண்டு விடுதிகளின் முகாமையாளர்கள் இருவர் உட்பட மொத்தம் 17 பேரை கைது செய்துள்ளனர்.
மஹர நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட தேடுதல் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த முற்றுகை நடவடிக்கை கடந்த 5-ஆம் திகதி அதிகாலை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, முதலாவது மசாஜ் நிலையத்திலிருந்து ஒரு பெண் முகாமையாளர் உட்பட 5 பெண்கள் மற்றும் சேவை பெற வந்திருந்த 2 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டாவது மசாஜ் நிலையத்திலிருந்து பெண் முகாமையாளர் ஒருவர் உட்பட 5 பெண்கள் மற்றும் சேவை பெற வந்திருந்த 3 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் அனுராதபுரம், கண்டி, கந்தளாய், வாதுவை, பொல்கஹவெல மற்றும் நிக்கவெரட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.