இலங்கையில் தங்கத்தின் விலை சரிவு; இன்னும் குறையலாம்! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (13) மீண்டும் சரிவு பதிவாகியுள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
நேற்று முன்தினம் (11) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 378,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்து 376,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை
இந் நிலையில் தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ளோர், சந்தை விலை மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்து வாங்குவது சிறந்தது என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.