இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்கள் பறிமுதல்
இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 264 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 69 கிலோகிராம் ஏலக்காய் தோல்கள் உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் கற்பிட்டி, பத்தலங்குண்டுவ – சின்ன குண்டு கடற்கரைப் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சட்ட நடவடிக்கை
வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் செயற்படும் இலங்கை கடற்படைக் கப்பலால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் காணப்பட்ட 13 பொதிகள் சோதனையிடப்பட்டன.
இதன்போது, அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 264 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 69 கிலோகிராம் ஏலக்காய் தோல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்கள் மீட்புசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்கள் மீட்புகைப்பற்றப்பட்ட நறுமணப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.