நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,962 ஆகும்.

டெங்கு நோயாளர்கள்
அத்துடன், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை 8,701 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
நாட்டின் மொத்த டெங்கு நோயாளர்களில் 52.93 சதவீதமானோர், அதாவது 49,771 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். இதற்கு மேலதிகமாக, தென் மாகாணத்தில் 13,763 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,519 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் அதிக அபாயம் உள்ள 76 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
டெங்கு நுளம்பு பெருகும் இடங்களைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், காய்ச்சல் நிலை காணப்பட்டால் தகுதியான மருத்துவரிடம் தாமதமின்றி சிகிச்சை பெறுமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களை அறிவுறுத்துகின்றனர்.