கிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது
கிளிநொச்சி, கிரஞ்சி கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர், சுமார் 380 கடல் அட்டைகள் மற்றும் தெப்பப் படகுடன் நேற்று (24) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பலால் கிரஞ்சி கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சட்ட நடவடிக்கை
இதன்போது, கிரஞ்சி கடற்கரையை நோக்கி வந்த தெப்பப் படகொன்றை கடற்படையினர் சோதனையிட்டுள்ளனர்.
அதில் அனுமதியின்றி கடல் அட்டைகளை தரைப்பகுதிக்கு கடத்திச் சென்ற 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், சுமார் 380 கடல் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.