சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டு ; ‘லொகு பெட்டி’க்கு மீண்டும் விளக்கமறியல்
பணச்சலவைச் சட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய் பணத்தை தனது கணக்கில் வரவு வைப்பதற்காகப் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 'லொகு பெட்டி' என்பவரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போத்தரகம இன்று (26) உத்தரவிட்டார்.
காரில் மீட்கப்பட்ட பெண் மருத்துவரின் மரணம் ; வாக்குமூலத்தால் வெளியான திடுக்கிடும் சம்பவங்கள் அம்பலம்
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னரே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கந்தர தேவாலயத்தின் பூசகர் உள்ளிட்ட இருவர், முந்தைய வழக்கு விசாரணையின் போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் முதலாவது சந்தேகநபர் சூம் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.