யாழில். தொடரும் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வு

Jaffna Sri Lankan Peoples Crime Water National People's Power - NPP
By Sahana Dec 30, 2024 10:47 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சுண்ணக்கல் அகழ்ந்து திருகோணமலைக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது இதனை கட்டுப்படுத்த எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது ; கஜேந்திர குமார் பொன்னம்பலம்

தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது ; கஜேந்திர குமார் பொன்னம்பலம்

தென்மராட்சி பகுதிகளில் உள்ள தனியார் காணிகளிலையே சுண்ணக்கல் உள்ளிட்ட கனிமங்கள் சட்டவிரோதமான முறையில் அகழ்ந்து எடுத்து செல்லப்படுகிறது.

தென்மராட்சியில் குறிப்பாக , மந்துவில் , வேம்பிராய் பகுதிகளில் தனியார் ஒருவர் பெருமளவான நிலப்பரப்பினை வாங்கி , தனது காணிக்குள் மண், சுண்ணக்கல், போன்றவற்றை அகழ்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.

யாழில். தொடரும் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வு | Illegal Limestone Mining Continues In Jaffna

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர் , சுண்ணக்கற்களை அவரிடம் வாங்கி அவற்றை திருகோணமலையில் உள்ள சீமெந்து உற்பத்தி நிலையத்திற்கு விற்பனை செய்து வருகின்றார்.

குறித்த தனிநபர்களின் செயப்பாடுகளினால் அப்பகுதிகளில் பாரிய பள்ளங்கள் தோன்றியுள்ளன. தமது காணிகளில் கனிம வளங்களை அகழ்ந்தவர்கள் தற்போது , அரச காணிகளிலும் தமது கைவரிசையை காட்ட தொடங்கியுள்ளனர்.

யாழ்ப்பாண குடாநாட்டிலுள்ள நீர் வளத்தை சேமிக்க பிரதான அச்சாணியாக சுண்ணக்கல் காணப்படுகின்றது. இது நீரினை தேக்கி வைக்க உதவுகின்றது. இங்கு மழைநீர் மூலம் ஊடுருவும் முழு நிலத்தடி நீரும் நண்ணீராக மாறுகின்றது.

யாழில். தொடரும் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வு | Illegal Limestone Mining Continues In Jaffna

கடல் மட்டத்துக்கு கீழே உவர்நீரும் கடல் மட்டத்துக்கு மேலே நன்னீரும் காணப்படுகின்றது. அவ்வாறான நிலையில் சட்டவிரோதமான முறையில் பெருமளவில் சுண்ணக்கல் அகழ்வு இடம்பெறுவதால் , நிலத்தடி நீர் உவராகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அந்நிலையில் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என பல தரப்பினரும் கோரி வந்த நிலையில் ,

கடந்த மே மாதம் 30ஆம் திகதி யாழ் . மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், "சட்டவிரோதமான முறையில் 2 முதல் 3 மீற்றருக்கு மேல் ஆழமாக சுண்ணக்கல் அகழப்பட்டு யாழ் மாவட்டத்தில் இருந்து அனுமதியற்ற முறையில் வர்த்தக நோக்குடன் பிற மாவட்டங்களுக்கு சுண்ணக்கல் எடுத்துச் செல்லப்படுகிறது" என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் குற்றம் சாட்டி அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்.

யாழில். தொடரும் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வு | Illegal Limestone Mining Continues In Jaffna

அதனை தொடர்ந்து ஜூன் மாதம் குறித்த பகுதிகளை அப்போதைய ஒருங்கிணைப்பு குழு தலைவரான டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டு இருந்தார். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் சுண்ணக்கல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

இது தொடர்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியின் யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகழ்வுகள் இடம்பெறும் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு , அகழ்வு பணிகளை இடைநிறுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என அப்பகுதி மக்களுக்கு உறுதி அளித்திருந்தார்.

ஆனாலும் இன்னமும் அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதனால் , தமது பகுதியை காப்பாற்ற உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். 

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்திய விண்கலங்கள்

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்திய விண்கலங்கள்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US