சட்டவிரோத சிறுநீரக விற்பனை; சிக்கலில் கொழும்பு தனியார் வைத்தியசாலைகள்
சுற்றுலா விசாக்களில் நாட்டுக்கு வரும் இந்திய பிரஜைகள் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக விற்பனையில் ஈடுபடுவது தொடர்பாக சிறப்பு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கபடுள்ளது.
இந்த தகவலை பொலிசார் நேற்றையதினம் கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திர ஜெயசூரிய முன்னிலையில் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
கொழும்பில் உள்ள பல முன்னணி தனியார் மருத்துவமனைகளில் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சிறுநீரக மாற்று சிகிச்சைகளுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் நீதிமன்றத்திற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் நீண்ட காலமாக சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்டு இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.