கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
நேற்று வெள்ளிக்கிழமை (16) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 12,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் (60 அட்டைப் பெட்டிகள்) மற்றும் 23,800 வெளிநாட்டு பீடிகள் (119 மூடைகள்) கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் மத்துகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக விமான நிலையப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.