புத்தளத்தில் சட்டவிரோத பீடி இலைகள் பறிமுதல்
புத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புத்தளம் தளுவ கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதியை ஏற்றிச் செல்லத் தயாராக இருந்த லொறியொன்றை கடற்படையினர் மற்றும் நொச்சியாகம பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் கைப்பற்றியுள்ளனர்.

வடமேல் கடற்படை கட்டளைக்குச் சொந்தமான 'தம்பபண்ணி' கப்பலின் கடற்படையினர் நேற்று (24) மேற்கொண்ட சோதனையின்போது, சந்தேகத்திற்கிடமான லொறியில் 20 உறைகளில் பொதியிடப்பட்டிருந்த பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதியும் லொறியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நொச்சியாகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.