அரசியலை விடுவிட்டு துறவறம்; பாமக நிறுவனர் ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
இன்று முதல் அரசியல் துறவறம் பூணுவதாக தனது 88வது பிறந்த நாளில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். ராமதாசின் 88வது பிறந்த நாள் விழா, திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ், “இன்று எனக்கு 88 ஆவது வயது ஆரம்பமாகிறது. இந்த தருணத்தில் நான் ஒரு நல்ல செய்தியை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். இன்று முதல் நான் அரசியல் துறவரம் பூணுகிறேன்.

அரசியலே பேச மாட்டேன், அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன்
அரசியல் துறவறம் என்று சொன்னால், அரசியலே பேச மாட்டேன், அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன். வருபவர்களைப் பார்ப்பேன். நலம் விசாரிப்பேன். அவ்வளவுதான். ரசியலில் நான் தலையிடமாட்டேன். அதை அன்புமணி பார்த்துக்கொள்வார்.
அவரது துணைவியாரும் அவருக்கு துணையாக இருப்பார். நாங்களும் துணையாக இருப்போம். என்னைப் பார்க்க வருபவர்கள் நலம் விசாரிக்க வரலாம். அரசியல் பேசுவதற்கு ஏதும் இல்லை. ஏனென்றால், நான் இன்றிலிருந்து அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன் என கூறியுள்ளார்.