தமிழர் பகுதியொன்றில் நடந்த சட்டவிரோத செயற்பாடு ; விசேட அதிரடிப்படை காட்டிய அதிரடி
திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் அதன் சாரதிகளும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது அனுமதிப்பத்திரமின்றி பரவிபாஞ்சான் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 உழவு இயந்திரங்களும் அதன் சாரதிகளும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாரதிகளும் கைது
அதேவேளை மூதூர் -மணற்சேனை பகுதியில் உள்ள காணியொன்றில் அனுமதிப்பத்திரமின்றி மண் ஏற்றிய 4 உழவு இயந்திரங்கள், ரோலர் இயந்திரமும் மூதூர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் டிப்பர் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட வாகனச் சாரதிகளை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.