யாழில் பாராமுகமாக செயற்படும் இளவாலை பொலிஸார் ; குற்றஞ்சாட்டும் இளைஞன்
யாழ்ப்பாணத்தில் தமது தந்தையின் பணம் களவாடப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டை இளவாலை காவல்துறையினர் பதிவு செய்யவில்லை என இளைஞர் ஒருவர் குற்றச்சாட்டினார்.

IPL கிரிக்கெட் போட்டி ; அனைத்து துடுப்பாட்ட வீரர்களினதும் துடுப்பாட்ட மட்டைகளைப் பரிசோதிக்கத் தீர்மானம்
கடந்த 10ஆம் திகதி தனது தந்தையின் பணம் களவாடப்பட்டதாகவும் இது தொடர்பில் இளவாலை காவல் நிலையத்திற்கு,
மாலை 3 மணியளவில் தாம் சென்றதாகவும் மாலை 6 மணிவரை காக்க வைத்த காவல்துறையினர் பின்னர் முறைப்பாடும் பதிவு செய்யாமல் வெற்றுக் காகிதம் ஒன்றில் குறித்து வைத்துவிட்டு தங்களைத் திருப்பி அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
களவாடப்பட்ட பணத்தைக் கண்டுபிடித்துக் கொடுப்பதற்கு காவல்துறையினர் முயற்சிக்கவில்லை எனவும் குறித்த இளைஞர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், அவர்களது தரப்பிலிருந்து உரிய வகையில் எந்த பதிலும் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.