தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பம்; வருகை தந்த முக்கியஸ்தர்கள்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் ஆரம்பித்துள்ளது.
வவுனியா, குருமன்காடு, காளி கோவில் வீதியில் அமைந்த கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இக் கூட்டம் இன்று (05.11) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இக் கூட்டத்தில் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம், மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், இ.சாணக்கியன், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் கட்சியின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

