யாழில் பச்சை மிளகாய் வாங்க துப்பாக்கியுடன் வந்தவர் கைது ; வெளியான தகவல்
யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் பச்சை மிளகாய் வாங்க வந்தவர் கொண்டு வந்த துப்பாக்கி போலி துப்பாக்கி எனவும், மனநலம் பாதிக்கப்பட்ட அவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மருதனார்மடம் சந்தைக்கு இன்றைய தினம் காலை T-56 ரக துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது.

மனநலம் பாதிப்பு
தலைக்கவசம் அணிந்து வந்த குறித்த நபர் கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் பச்சை மிளகாயை கொள்வனவு செய்து கொண்டு" சந்தைக்குள் வட்டிக்கு பணம் வழங்குபவர்கள் யார்? " என வினாவியுள்ளார்.
குறித்த நபர் கையில் கொண்டுவந்திருந்த பையினுள் ரி 56 ரக துப்பாக்கி காணப்பட்டதாகவும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் கண்காணிப்பு கமரா பதிவுகளை சோதனையிட்டு குறித்த நபரை அடையாளம் கண்ட பொலிஸார், அவரை கைது செய்து செய்துள்ளனர்
குறித்த நபர் சந்தைக்கு கொண்டு சென்ற துப்பாக்கியையும் மீட்டு சோதனையிட்டதுடன் போலி துப்பாக்கி எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.
குறித்த நபர் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், சுன்னாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.