அலர்ஜியை அலட்சியப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள்!
பொதுவாக நமக்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிட்டவுடன் உடலில் நமக்கு சில அறிகுறிகள் தோன்றுகின்றன. இந்த ஒவ்வாமை காரணமாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக உடலில் அலர்ஜி உண்டாகும் .
தொல்லையாக மாறி வரும் அலர்ஜியை சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
பொதுவான ஒவ்வாமை
மூக்கு ஒழுகுதல், லேசான மூச்சுத் திணறல், இருமல், கண் அரிப்பு மற்றும் சைனஸ் தலைவலி ஆகியவை அன்றாடம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் பொதுவான ஒவ்வாமை.
சிலருக்கு ஒவ்வாமை காரணமாக குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற தொல்லைகள் உருவாகின்றன. சிலருக்கு ஒவ்வாமை காரணமாக சிலருக்கு தோலில் அரிப்பு, தடிப்புகள் வெளிப்படுகின்றன.
இந்த ஒவ்வாமை காரணமாக உதடு வீங்குதல், கன்னம் சிவத்தல், கண்கள் சிவத்தல் தோன்றுகின்றன , ஒவ்வாமை காரணமாக இமைகள், காது, தொண்டை போன்ற இடங்களில் வீக்கம் உண்டாகும் , சுவாசிக்க சிரமம் என அறிகுறிகள் தோன்றலாம்.
சிலருக்கு ஆஸ்துமா, தாங்க முடியாத தலைவலியும் இந்த ஒவ்வாமை காரணமாக உண்டாகும்ஒவ்வாமைக்கு வீட்டு வைத்தியம் சில மணிநேரங்களுக்கு உங்களுக்கு உதவும் ஆனால் அவை நிரந்தர தீர்வாகாது.
நம்மில் பெரும்பாலோர் கவனம் செலுத்தாமல், அவர்களை கவனிக்காமல் விட்டுவிடுவதால் அது பல பிரச்சனைகளை நமக்கு கொண்டுவரும். எனவே இதற்கு ஒரு நிபுணரிடம் முறையான சிகிச்சை தேவை.
அலர்ஜியை உண்டாக்கும் உணவு
பொதுவாக ஒவ்வாமையை உண்டாக்கும் உணவுகளாக முட்டை, பசுப்பால், கெட்டி தயிர், கடல் மீன்கள்,உள்ளன . மேலும் கருவாடு, கோதுமை, மக்காச்சோளம், முந்திரி, போன்ற பொருட்களும் ஒவ்வாமையை உண்டாக்கும்
ஆரஞ்சு, ஆப்பிள், எலுமிச்சை, சாத்துக்குடி, நார்த்தம்பழம், வாழைப்பழம்,கூட ஒவ்வாமையை உண்டாக்கும்
பட்டாணி, பாதாம், சோயா பீன்ஸ், சாக்லேட்டில் உள்ள கொக்கோ, சோடா போன்றவைகள் அதிகம் ஒவ்வாமையை ஏற்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மீன்களில் குளத்து மீன்களை விட கடல் மீன்கள் தான் ஒவ்வாமையை அதிகம் ஏற்படுத்துகின்றன.