நான் ஜனாதிபதியாகியிருந்தால் ... எரிபொருள் வரிசை இருக்காது ; சீலரத்தன தேரர் !
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு, தான் ஜனாதிபதியாகியிருந்தால் எரிபொருள் வரிசைக்கு தற்போது உரிய தீர்வு வழங்கப்பட்டிருக்கும் என ஜன செத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கோட்டாவின் வரிசை அனுரவுக்கு வந்துள்ளது
நாட்டில் மீண்டும் வரிசை யுகம் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்ட தேரர் , கோட்டாவின் வரிசை அனுரவுக்கு வந்துள்ளது. அநுரவின் வரிசை யாருக்கு செல்லப்போகின்றது என தெரியவில்லை.
வரிசையில் நின்று நின்று கடைசியில்அந்த வரிசை எனக்கும் வருமா என்று தெரியவில்லை என்றும் சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த வரிசைக்கு, நான் ஒரு ஜனாதிபதியாக இருந்தால் சரியாக தீர்வுகளை வழங்கியிருப்பேன் எனவும் சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார் அதேவேளை பத்தரமுல்ல சீலரத்தன தேரர், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.