பிரச்சாரத்துல விஜயை திட்டமாட்டேன்; இயக்குனர் சுந்தர் C நெகிழ்ச்சி
தேர்தல் பிரச்சாரத்துல தவெக தலைவரும் நடிகருமான விஜயை தான் திட்டமாட்டேன் ஏனெனில் அவர் குஷ்புவுக்கு தம்பி என இயக்குனர் சுந்தர் C கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன்.
இந்தியாவில் வரும் 23 ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இயக்குனர் சிந்தர் சியும் அரசியலில் காலை வைத்துள்ளார். தமிழகத்தில் பல கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ள நிலையில், தேர்தல்கள் சூடு பிடித்துள்ளது.

குஷ்புவுக்கு விஜய் தம்பி போன்றவர்
தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் பல திரைப்படங்களை இயக்கி இப்போதும் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சுந்தர்.சி. இவர் இயக்கிய 95 சதவீத திரைப்படங்கள் வெற்றி படங்கள்தான்.
இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காதபடி அரசியலுக்கு வந்திருக்கிறார் சுந்தர் சி.. ஏற்கனவே அவரின் மனைவி குஷ்பு பாஜகவில் இருக்கும் நிலையில் இவர் மதுரை மத்திய தொகுதி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுந்தர். சி பிரச்சாரத்தின் போது ‘விஜய் மற்றும் தவெக வேட்பாளர்களை பற்றி நான் விமர்சிக்க மாட்டேன்.. ஏனெனில் என் மனைவி குஷ்புவுக்கு விஜய் தம்பி போன்றவர்.
மதுரை மத்திய தொகுதியில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்று இயக்குனர் சுந்தர்.சி கூறியுள்ளார்.