மோசடிக்காரர்களுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்! அமைச்சர் டலஸ்
மோசடி மற்றும் ஊழல்களைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.
மேலும் நான் அமைச்சராக கடமையாற்றும் எந்த துறையும் மோசடிகாரருக்கு இடமளிக்க மாட்டேன் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இன்று (06) ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
செலசின் நிறுவனத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாக எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்த அமைச்சர் டலஸ், அது தொடர்பில் தகவல்களை வெளியிட்ட ஊடகவியலாளருக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை மிக விரைவில் எடுக்கப்படும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.