ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் தொடர்ந்தும் இருப்பேன்! ஹரின்
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் தொடர்ந்தும் இருப்பேன் என ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாடு பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியைப் பொறுப்பேற்று நாட்டை நிர்வகிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ நேற்று முன்தினம் (11-05-2022) கோரியிருந்தார்.
இந்நிலையில், கட்சி முடிவெடுக்காவிட்டால் சுயேச்சை எம்.பி.யாக வருவேன் என நேற்று முன்தினம் (11-05-2022) தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராக பொறுப்பேற்க முன்வருமாறு அழுத்தம் கொடுப்பதற்காகவே இது மேற்கொள்ளப்பட்டதாக அவர் தனது அறிக்கைக்கு விளக்கமளித்தார்.
பிரேமதாச அவ்வாறு செய்ய முன்வந்ததால், தான் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் தொடர்ந்து இருப்பேன் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
சஜித் மற்றும் அநுரகுமாரவிடம் கெஞ்சும் எம்.பி!