நான் போர்க் குற்றவாளி அல்ல; சவேந்திர சில்வா

Shavendra Silva Sri Lankan Tamils Sri Lanka Final War Rajapaksa Family
By Sulokshi Sep 08, 2026 04:58 AM GMT
Report

  இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அத்துடன் தன் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், சர்வதேச அளவில் தன் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கான அடிப்படை குறித்து கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறுகையில்,

நான் போர்க் குற்றவாளி அல்ல; சவேந்திர சில்வா | I Am Not A War Criminal Shavendra Silva

இலங்கை அரசாங்கங்கள் சரியானபடி விளக்கமளிக்கவில்லை

இலங்கைப் பாதுகாப்பு படையினர் புலிகளுக்கு எதிராகத் தொழில்முறை ரீதியிலேயே போரிட்டனர் என்றும், இறுதி இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2020 ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2025 ஆம் ஆண்டில் பிரித்தானியாவும் தன் மீது விதித்துள்ள தடைகளுக்கான காரணங்களை தொடர்ந்து கேட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தான் ஒரு போர்க் குற்றவாளி அல்ல என்றும் தாய்நாட்டுக்காகவே போரிட்டதாகவும் தெரிவித்தார்.

யாழில் துரித கதியில் முன்னெடுக்கப்படும் தூர்வாரும் நடவடிக்கை

யாழில் துரித கதியில் முன்னெடுக்கப்படும் தூர்வாரும் நடவடிக்கை

இராணுவத்தினர் வேண்டுமென்றே பொதுமக்களை இலக்கு வைக்கவில்லை எனக் கூறிய சவேந்திர சில்வா, போரின் போது பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், ஆனால் அவை திட்டமிட்டுச் செய்யப்பட்டவை அல்ல என்றும் விளக்கமளித்தார்.

2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தில் தனது 58 ஆவது படைப்பிரிவு 123,000 க்கும் அதிகமான பொதுமக்களை மீட்டதாகவும், சரணடைந்த சுமார் 12,000 புலிகள் உறுப்பினர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் தனது படைப்பிரிவிடமே சரணடைந்ததாகவும் குறிப்பிட்டார்.

சட்டசபையில் அமளிதுமளி; திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றிய காவலர்கள்!

சட்டசபையில் அமளிதுமளி; திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றிய காவலர்கள்!

அவ்வாறு சரணடைந்தவர்கள் பின்னர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

புலிகளின் வட பிராந்திய சிரேஷ்ட தளபதி ஒருவர் சிவில் உடையில் ஆயுதத்துடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், சீருடை அணியாத போராளிகள் கொல்லப்படும் போது அவர்கள் பொதுமக்களாகக் கணக்கிடப்படும் சூழல் நிலவுவதாகக் கூறினார்.

புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சாடினார்.

பிள்ளைகள் சேர்கைக்கு இரண்டரை இலட்சம் லஞ்சம் பெற்ற பிரபல பாடசாலை அதிபர்!

பிள்ளைகள் சேர்கைக்கு இரண்டரை இலட்சம் லஞ்சம் பெற்ற பிரபல பாடசாலை அதிபர்!

இலங்கை அரசாங்கங்கள் சர்வதேச ரீதியில் இராணுவத்தின் பக்க நியாயங்களை சரியாக முன்வைக்கத் தவறியதே தன் மீதான குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் வலுப்பெறக் காரணம் என அவர் விமர்சித்தார்.

குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்துடன் கூடிய ஆதாரங்களுடன் நேரடியாக விவாதத்துக்கு வருமாறு சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்த அவர், தவறு நடந்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்தார்.

மேலும், புலிகள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும், தமிழ் மக்களின் குறைகளுக்கு அரசியல் ரீதியாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US