பரிதாபமாக உயிரிழந்த பிரபல இளம் சர்ச்சைக்குரிய இந்திய நடிகை! சோகத்தில் ரசிகர்கள்
பிரபல பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பூனம் பாண்டே மரணம் குறித்த அறிக்கையை அவரது குடும்ப உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்.
மாடலிங் துறையில் பிரபலமான இவர் நிஷா என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி இந்தி, கன்னடா, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என கூறி சர்ச்சைக்குள் சிக்கினார்.
இவர் கடந்த 2020ம் ஆண்டு தன் காதலன் சாம் பாம்பெயை திருமணம் செய்துகொண்டார்.
இதனிடையே, பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் (02-02-2024) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பூனம் பாண்டேவின் உயிரிழப்பு அவரின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.