கர்ப்பிணி மனைவியை கட்டி வைத்து கொடூரமாக கொலை செய்த கணவன்! அதிர்ச்சி சம்பவம்
இந்தியா, பஞ்சாப் மாநிலத்தில் கர்ப்பிணி மனைவியை கணவன் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே உள்ள புல்லேநங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுக்தேவ் என்பவர் 23 வயதான பிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தார்.

34 ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிட்டு பணம் செலுத்தாமல் எஸ்கேப்பான குடும்பம்; வித்தியாசமாக பழிதீர்த்த உணவகம்
6 மாத கர்ப்பமாக இருந்த பிங்கியின் வயிற்றில், இரட்டை குழந்தைகள் வளர்ந்து வந்திருந்தது. சில தினங்களாகவே, சுக்தேவுக்கும், பிங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (20-04-24) வழக்கம் போல், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சுக்தேவ், கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் மனைவி கட்டிலோடு சேர்த்து கட்டி வைத்து தீ வைத்துள்ளார்.
இதில், கர்ப்பிணி பெண்ணான பிங்கியின் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சந்தேக நபரான சுக்தேவ் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், உயிரிழந்த பிங்கியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், கர்ப்பிணி மனைவியை தீ வைத்து தப்பியோடிய சுக்தேவை பிடித்து கைது செய்த பொலிஸார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.