தமிழர் பகுதியில் தாயாரை சந்திக்க சென்ற இளம் குடும்பபெண்ணுக்கு கணவன் அரங்கேற்றிய பயங்கரம்
மட்டக்களப்பு சித்தாண்டியில் கணவனின் தாயாரை சந்திக்க சென்ற மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கணவன் தப்பி ஓடிய சம்பவம் வியாழக்கிழமை (24) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.
மாவடிவேம்பு ஆர்.டி.எஸ். வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

தகராறு
மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய கூலித் தொழிலாளிக்கு திருமணம் முடித்து 10 , மற்றும் 7 வயதில் மகனும் மகளும் உள்ளனர் கணவன் தினமும் மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு சென்று மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ தினமான வியாழக்கிழமை (24) மனைவியின் கையடக்க தொலைபேசியை கணவன் எடுத்துச் சென்று அதனை விற்பனை செய்து பணத்தை எடுத்து அதற்கு மதுபானம் வாங்கி குடித்துவிட்டு வீடு வந்துள்ளார்.
தமிழர் பகுதியில் நாவற்பழம் விற்றுக்கொண்டிருந்த 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த பெரும் துயரம் ; கதறும் உறவுகள்
இதையடுத்து கணவன் மனைவிக்கிடையே நீண்ட நேரம் தகராறு இடம்பெற்று வந்துள்ள நிலையில் மனைவி வீட்டில் இருந்து வெளியேறி சித்தாண்டி கலைமகள் வீதியில் உள்ள கணவனின் தாயாரான மாமியாரிடம் கணவனை பற்றி முறையிடுவதற்கு அங்கு சென்றுள்ள நிலையில் மனைவியை பின் தொடர்ந்து சென்ற கணவர் தனது தாயார் வீட்டில் வைத்து மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தியதையடுத்து அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இதையடுத்து பொலிஸ் அவசர சேவை 119 அறிவித்ததையடுத்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்தாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த நபர் கடந்த மாதம் 24ம் திகதி போதை பொருளுடன் கைது செய்ததுடன் மது போதைக்கு அடிமையாகியுள்ளதாகவும் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நீதவானின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.