வெளிநாட்டு ஆசை! மனைவியை வேறொருவருடன் திருமணம் செய்து வைத்த கணவர் ; இறுதியில் நடந்த ட்விஸ்ட்
மனைவியை வேறொருவருக்கு திருமணம் செய்து பிரித்தானியாவிற்கு அனுப்பிவைத்த கணவன் மன உளைச்சலில் விபரீத முடிவை எடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இந்த துயரச் சம்பவம், இடம்பெற்றுள்ளது.

மன உளைச்சல்
தனது மனைவியின் வெளிநாட்டுப் பயணத்தை ஏற்பாடு செய்த பின்னர், மனைவி தொடர்பை முறித்ததால் மன உளைச்சலில் கணவர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
மனைவிக்கு பிரித்தானியா செல்ல விசா கிடைக்கச் செய்வதற்காக, அந்த நபர், தனது மனைவியை விவாகரத்து செய்து, மற்றொரு நபருக்குத் திருமணம் செய்து வைத்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒப்பந்தப்படி, பிரித்தானியா சென்ற பின், அவர் விவாகரத்து செய்து, மீண்டும் முதல் கணவருடன் சேர வேண்டும் என திட்டமிடப்பட்டது. ஆனால், மனைவி பிரித்தானியா சென்ற பின், கணவரின் அழைப்புகளைத் தவிர்த்து, அனைத்து தொடர்புகளையும் துண்டித்துவிட்டார்.
இதனால், மன உளைச்சலில் , கணவர் கால்வாயில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸார் அந்த பெண்ணுக்கு எதிராக உயிர்மாய்ப்புக்குத் தூண்டுதல் மற்றும் மோசடி குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.