இலங்கையில் பகீர் சம்பவம்: சகோதரின் கணவனால் சகோதரனுக்கு நேர்ந்த அதிர்ச்சி!
கேகாலை - தெஹியோவிட்ட, திகல பிரதேசத்தில் ஒருவர் கோடரி மற்றும் கல்லால் தாக்கி கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த கொலை சம்பவம் நேற்றையதினம் (21-01-2024) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் தெஹியோவிட்ட பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உயிரிழந்த நபர் குடித்துவிட்டு வந்து தனது சகோதரியுடன் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார்.
பின்னர், அவரது கணவர் வந்து கோடாரி மற்றும் கல்லால் குறித்த நபரை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
43 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தெஹியோவிட்ட பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.