சாப்பிட்டுக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவன்
கணவன் வீடொன்றில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் படஹேன இஹல ஹெவெஸ்ஸ பகுதியில் இடம் பெற்றுள்ளதாக தினியாவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் அருகில் உள்ள தோட்டத்தில் மறைந்திருந்தபோது கொலைக்கு பயன்படுத்திய கத்தியுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சை
கடந்த 31ஆம் திகதி இருவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்தே சந்தேக நபரின் தாக்குதலுக்கு இலக்காகிய பெண் ஹினிதும வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையுண்ட பெண் தனது தாய் மற்றும் சகோதரனுடன் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தபோது சந்தேக நபர் கத்தியுடன் வீட்டுக்குள் பிரவேசித்து தகராறில் ஈடுபட்டபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.