முல்லைத்தீவு பெண் கொலையில் கணவன் பகீர் வாக்குமூலம்
முல்லைத்தீவு - நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கணவர் பகீர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொழும்பில் கைதான பெண்ணின் கணவன் அளித்த வாக்குமூலத்தில்,
குடும்பத்தில் தகராறு
எங்கள் இருவருக்கு இடையில் ஒவ்வொரு நாளும் பிரச்சினை ஏற்படும். சம்பவ தினத்தன்று இருவரும் சண்டை போட்டுக் கொண்டோம். அப்போது நான் மனைவியின் கழுத்தில் தாக்கிய போது அவள் நிலத்தில் விழுந்தாள், நீண்ட நேரம் எழும்பவில்லை.
இதனையடுத்து அவளை தொட்டுப்பார்த்தபோது இறந்துவிட்டாள். என்னசெய்வதென்று தெரியாமல், வீட்டுக்கு பின்புறம் மலசலகூடத்துக்கு அருகில் உள்ள குழியில் போட்டு மூடிவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 23 வயதுடைய கீதா முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரை திருமணம் முடித்து நீராவிபிட்டி கிழக்கு பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் கடந்த மூன்று வாரமாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தாயாருடன் தினமும் தொலைபேசி அழைப்பில் பேசும் பெண்னிடம் இருந்து அழைப்பு வராததால் தாயார் பொலிஸில் அளித்த முறைப்பட்டை அடுத்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.