ஐயோ...நான் குளிப்பதை அவ பார்த்துட்டா.... பிக்பாஸ் வீட்டில் புலம்பும் விஷ்ணு!
பிக்பாஸ் வீட்டில் தான் குளிப்பதை பூர்ணிமா பார்த்துவிட்டதாக கூறி விஷ்ணு புலம்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 7-வது சீசன் நடைபெற்று வருகிறது.
இந்த சீசனில் மாயா, பூர்ணிமா, வினுஷா, விசித்ரா, ரவீனா, ஐஷூ, அக்ஷயா, அனன்யா ராவ், யுகேந்திரன், பவா செல்லதுரை, விஜய் வர்மா, சரவண விக்ரம், பிரதீப் ஆண்டனி, மணிச்சந்திரா, ஜோவிகா, நிக்சன், கூல் சுரேஷ், விஷ்ணு விஜய் என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மாயாவிடம் புலம்பும் விஸ்ணு
பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் இந்த சீசன் மட்டும் இரண்டு வீடுகளுடன் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிக்பாஸ், சுமால் பாஸ் என இரு வீடுகளாக பிரிக்கப்பட்டு, சுமால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு சமைத்துக் கொடுக்க வேண்டும் என நிபந்தனைகளும் விதிக்கப்பட்டு உள்ளது.
#Poornima accidentally opened the bathroom door when #Vishnu was taking a bath?#BiggBoss7Tamil #BiggBossTamil7#BiggBossTamil pic.twitter.com/iUzVW7aON7
— Akshay (@Filmophile_Man) October 24, 2023
இந்நிலையில் தான் பாத்ரூமில் டாப்பால் போடாமல் குளித்ததை பூர்ணிமா பார்த்துவிட்டதாக கூறி விஷ்ணு மாயாவிடம் புலம்புகிறார்.
அதற்கு டாப்பா போடாம உங்கள யார் குளிக்க சொன்னா என பூர்ணிமா விஷ்ணுவிடம் கேட்க, அதற்கு அவர் தனக்கு அநியாயம் நடந்துவிட்டதாக கூறி புலம்புகிறார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் வேற நடக்குதா என கலாய்த்து வருகின்றனர்.