04 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, நான்கு மாவட்டங்களின் 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் எச்சரிக்கை விடுக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது நாளை (28) பிற்பகல் 4 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை
களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எஹலியகொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலையின் கீழ் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகள்
களுத்துறை : மத்துகம
கேகாலை : தெஹியோவிட்ட தெரணியகல ருவான்வெல்ல யட்டியாந்தோட்டை புலத்கொஹுபிட்டிய
நுவரெலியா : அம்பகமுவ
இரத்தினபுரி : பெல்மதுல்ல கிரியெல்ல எலபாத கலவானை நிவித்திகல