மன்னார் வீதியில் வீசப்பட்ட மனித உடல் பாகங்கள்; மக்கள் விசனம்
மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சௌத்பார் பகுதியில் இறந்த சடலங்களில் இருந்து அகற்றப்படும் மனித எச்சங்களை உரிய வகையில் புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை காரணமாக பாரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறித்த பகுதியில் இயங்கி வரும் தனியார் மனித உடல் பதப்படுத்தும் நிலையத்தில், மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாய்களால் இழுத்துச் செல்லப்பட்டு மனித உடற் பாகங்கள்
இறந்த உடல்களில் இருந்து அகற்றப்பட்ட மனித உடற் பாகங்கள் அந்த பகுதியில் நாய்களால் இழுத்துச் செல்லப்பட்டு பல்வேறு இடங்களில் சிதறி கிடந்துள்ளது.
நீண்ட காலமாக இந்த நிறுவனம் மனித எச்சங்களை சரியான முறையில் அப்புறப்படுத்தாமல், மக்கள் நடமாடும் பகுதிகளில் அருகிலேயே வீசி வருவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் மன்னார் நகரசபையின் தவிசாளருக்கு பொதுமக்களால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக நகர சபையின் தவிசாளர் துரித நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். அத்துடன் குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.