ஹிங்குல் ஓயாவின் கரையில் இரண்டு மண்டை ஓடுகளுடன் மனித எச்சங்கள் மீட்பு
குருநாகல் ஓவத்த வீதியில் உள்ள ஹிங்குல் பகுதியில் உள்ள ஹிங்குல் ஓயாவின் கரையில் இன்று (08) சில மனித உடல்களின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் ஒரு தொகை எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
பையொன்றில் இரண்டு மண்டை ஓடுகளும், மனித எலும்புக்கூடுகளும் காணப்பட்டதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவர் அப்பகுதிக்கு சென்றபோது இந்த எலும்புக்கூடுகள் அடங்கிய பையை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
மாவனெல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுஆராச்சியின் உத்தரவின் பேரில், கேகாலை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
மீட்கப்பட்ட இரண்டு மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக்கூடுகளை கேகாலை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு மாவனெல்ல பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.