தமிழர் பகுதியொன்றில் குளத்தில் மிதந்த மனித தலை ; பெரும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
காத்தான்குடி பகுதியில் நேற்று (25) குளம் ஒன்றிலிருந்து உடலின் பாகம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த உடல் பாகம் காத்தான்குடி - 5 பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரின் தலை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
மேலும் அவரது உறவினர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த நபர் காணாமல் போனதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உடல் பாகம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் முதலைகள் அடிக்கடி வந்து செல்வதாகவும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் அந்த நபர் குறித்த இடத்தில் குளிக்கச் சென்றிருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் குறித்த நபர் முதலையால் தாக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த உடல் பாகம் பிரேத பரிசோதனைக்காக காத்தான்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.