ராகுல் காந்திக்கு கிடைத்த அபார வெற்றி!
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று சிக்கலிலுள்ள ராகுல் காந்திக்கு பெருமையை சேர்த்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகள் 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகள் மாநிலத்தில் உள்ள 30 மையங்களிலும் இடம்பெற்றுள்ளது.
அதன்படி மொத்தமாகவுள்ள 224 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி சுமார் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன்போது தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.