டன் கணக்கில் குவிந்துள்ள குப்பைகளை அழிப்பதில் பாரிய சிக்கல்
ஸ்ரீ தலதா வழிபாட்டின் பின்னர் கண்டி நகரத்தில் 633 மெட்ரிக் டன் கழிவுகள் கொஹாகொட கழிவுகள் கொட்டப்படும் பகுதியில் கொட்டப்பட்டுள்ளன.
இந்த கழிவுகளை கொழும்புக்குக் கொண்டு வந்து அழிப்பதில் நெருக்கடியான ஒரு நிலைமை காணப்படுவதாக கண்டி மாநகர சபை தெரிவித்துள்ளது.
கடந்த நாட்களில் 450 கழிவு கொள்கலன்கள் வகைப்படுத்தப்பட்டு நகரத்தில் கழிவுகள் சேர்வதற்காக வைக்கப்பட்டிருந்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை என கண்டி மாநகர சபை தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக வகைப்படுத்தப்படாமல் 633 மெட்ரிக் டன் கழிவுகள் சேர்ந்துள்ளதாக மாநகர சபை குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கழிவுகளைக் கொழும்பிற்குக் கொண்டு வருவதற்கு அதிகளவிலான போக்குவரத்து செலவு ஏற்படுவதால் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக மாநகர சபை மேலும் தெரிவித்துள்ளது.