மண்சரிவு குறித்து சிவப்பு எச்சரிக்கை ; மக்கள் பாதுகாப்புடன் இருக்க அதிகாரிகள் அறிவுரை
நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, இன்று (21) இரவு 8:30 மணி நிலவரப்படி நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) 'சிவப்பு நிற' (நிலை 3) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமையே இந்த எச்சரிக்கைக்குக் காரணமாகும்.

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்
கண்டி மாவட்டம்: யட்டிநுவர, தொலுவ, உடுதும்பர மற்றும் கங்கா இஹல கோரளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.
கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை, கேகாலை, தெஹியோவிட்ட, அரநாயக்க மற்றும் மாவனல்லை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.
மாத்தளை மாவட்டம்: ரத்தோட்டை, அம்பன்கங்க கோரளை, லக்கல பல்லேகம, வில்கமுவ மற்றும் உக்குவெல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.