எம்.பிக்களுக்கு அதிக இழப்பீட்டுத் தொகை தாரைவார்க்கப்பட்டது எப்படி?
2022 அமைதியின்மையின் போது எரிக்கப்பட்ட வீடுகளுக்காக 43 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீ காப்பீட்டின் கீழ் வழங்கப்பட்ட இழப்பீடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கலாநிதி பிரதீப மஹாநாமஹேவா கோரிக்கை விடுத்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் இலங்கையின் பேரிடர் நிவாரணக் கொள்கையின்படி, முழுமையாக அழிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு 2.5 மில்லியன் ரூபாய் என்று அவர் கூறினார்.
இழப்பீட்டின் சட்டப்பூர்வ அடிப்படை
இருப்பினும், மகாநாமஹேவா, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக தொகைகள் ஒதுக்கப்படுவது குறித்து கவலைகளை எழுப்பினார், இந்தக் கொடுப்பனவுகளுக்கான சட்டப்பூர்வ அடிப்படையைக் கேள்விக்குள்ளாக்கினார்.
மஹாநாமஹேவாவின் கூற்றுப்படி, அப்போதைய பொது நிர்வாக அமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் முந்தைய அரசாங்கத்தால் இழப்பீடு தீர்மானிக்கப்பட்டது. "சில நாடாளுமன்ற உறுப்பினர்களுகள் இழப்பீடு கோரவில்லை, ஆனால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
அது எப்படி நடக்கும்? யார் இவற்றை அங்கீகரித்தார்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பினார், இந்தக் குழு பயன்படுத்தும் அளவுகோல்களை மறுபரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சேதமடைந்த சொத்துக்களுக்கு காப்பீட்டுத் தொகையைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.