AI கருவிகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி? சுந்தர் பிச்சை வலியுறுத்தல்
செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் அளிக்கும் எல்லாவற்றையும் மக்கள் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
ஒரு ஊடக நேர்காணலில் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் ஆக்கப்பூர்வமான (Creative) விடயங்களுக்கு AI பொருத்தமாக இருந்தாலும், செய்திகள் போன்ற முக்கியமான மற்றும் உணர்வுள்ள துறைகளில் AI மாதிரிகள் தவறுகளுக்கு ஆளாகக்கூடும் என்று கூறியுள்ளார்.
இதனைப் பயன்படுத்தும் போது, மக்கள் அவற்றை ஏனைய கருவிகளுடன் இணைத்து (Integrated) பயன்படுத்த வேண்டும் என்றும், தகவல் சரிபார்ப்புக்காகக் கூகுள் தேடல் (Google Search) போன்ற அதிக அடிப்படை கொண்ட (more grounded) உலாவிகளைப் பயன்படுத்துமாறு அவர் மக்களை வலியுறுத்தினார்.
துல்லியமான தகவலை வழங்குவதன் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும், கூகுள் தனது அமைப்புகளில் முடிந்தவரை துல்லியமான தகவலை வழங்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.