கண்டியில் ஒரே நாளில் இத்தனை கொரோனா நோயாளர்களா?
கண்டி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 88 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அதிர்ச்சி தகவலை கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களம் இன்று வெளியிட்டது.
அதன்படி கண்டியில் 18 சுகாதாரப் பிரிவுகளில் இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட இடங்கள்
அக்குறணை – 01
தம்பரதெனிய- 01
தொலுவ – 01
கங்கவட்டகோரள – 02
ஹத்தரலியத்த – 01
கண்டி மாநகர சபை பிரிவு – 11
குண்டசாலை – 10
மெததும்பர – 01
மெனிக்கின்ன – 06
மினிப்பே – 01
பன்வில – 02
பஸ்பாகே கோரள – 07
பஹத்ததும்பர – 02
உடதும்பர – 22
உடபலாத்த – 07
உடுநுவர – 08
யட்டிநுவர – 03 ஆகியோரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.